சிக்கன் பிரியாணியில் சுடச்சுட மிதந்த அட்டைபூச்சி..! SS ஹைதராபாத் பிரியாணி கடையில் வாடிக்கையாளருக்கு பகீர் அனுபவம்!?

பார்சல் வாங்கி சென்ற பிரியாணியில் அட்டைப்பூச்சி இருந்ததாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடசென்னையில் தண்டையார்பேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற பிரியாணி கடையான "எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி" கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழிவதை நாம் காணலாம்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநிவாசன் என்பவர் "2 1/2 பிளேட்" பிரியாணிகளை பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். பிரியாணியை சாப்பிட தொடங்கியபோது அதனுடன் கொடுக்கப்பட்டிருந்த கத்திரிக்காய் பச்சடியில் அட்டைப்பூச்சி இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். 

உடனடியாக அவர் பிரியாணி கடைக்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்

இதனிடையே ஸ்ரீனிவாசன் அளித்த புகாருக்கு அந்த பிரியாணி கடை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. பிரியாணி வாங்கி சென்று ஒரு மணி நேரத்திற்குப்பிறகு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர். மேலும் பிரியாணியில் அட்டைப்பூச்சி இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்றும் கூறியுள்ளனர்

இந்த சம்பவமானது தண்டையார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.