உலகக்கோப்பை! இந்தியாவுக்கு 'அது' ஒன்று தான் செம சவால்! கோஹ்லி கவலை!

உலககோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.


இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. அதற்கு முன்பாக பேட்டி அளித்த விராட் கோஹ்லி முந்தைய தொடர்களை விட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். எந்த ஓரு அணியும் சிறப்பாக விளையாடி அதிர்ச்சியை அளிக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் இங்கிலாந்து மைதானத்தில் நிலவரங்களை விரைவாக  உணர்ந்து அதற்கேற்றாற்போல இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் எனவும் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.  உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ipl  தொடரில் ஆடிய இந்திய வீரர்கள் கோஹ்லி, டோனி, ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை ஜூன் மாதம் 5ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் நியூஸிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.