ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகின்றது தெரியுமா?

தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகையாகும்.


தமிழ்நாட்டில் மக்கள் பொங்கல் பண்டிகையின்போது புத்தாடை அணிந்து சூரியனுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையானது நமது ஊர்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பொங்கல் பண்டிகையானது உலகம் முழுவதும் வெவ்வேறு விதமாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முந்தைய காலங்களில் தமிழர்கள் மட்டுமே கொண்டாடிய பொங்கல் பண்டிகை காலம் செல்ல செல்ல மற்ற நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பரவியது. ஆப்பிரிக்காவில் 250க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள கோவில் சங்கம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகமான தமிழர்கள் அங்கு வசித்து வருவதால் ஆப்பிரிக்காவில் பொங்கல் விழா தேசிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அப்பகுதியில் தமிழ் சங்கங்களை ஏற்படுத்தி பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஜெர்மனியில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்களாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விளக்கும் வகையில் பல்வேறு கோவில்கள் உள்ளதால் காய்கறிகள் கரும்பு மூலம் தயாரிக்கப்படும் உங்கள் இறைவனுக்குப் அழிக்கப்பட்டு அங்கு விமர்சையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. துபாய் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற பகுதியில் வாழும் தமிழ் மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.