உலக சுகாதார நிறுவனத்திற்கு நாங்கள்தான் பெருமளவில் நிதி வழங்கி வருகிறோம். ஆனால், அது சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால், நிதியை நிறுத்த ஆலோசனை நடத்திவருகிறோம். என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்..!

இந்த நிலையில், டிரம்புக்கு உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ், ‘கொரோனா விவகாரத்தை தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர், ``தயவுசெய்து இந்த வைரஸ் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள். இது, தேசிய அளவியில் உள்ள வேறுபாடுகளைக் காட்டுவதாக உள்ளது. இன்னும் பல பிணப்பைகள்தான் வேண்டும் என்றால் தாராளமாக அரசியல் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிக பணம் கொடுப்பதால், அமெரிக்கா சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று டிரம்ப் நினைப்பது எத்தனை மடத்தனம் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. டிரம்ப் தவறான வழிகாட்டுதலில் அமெரிக்கா என்ன பாடுபடப் போகிறதோ ?