உத்திரபிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏண்டி எங்களயா காட்டி கொடுக்குற? கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிரோடு எரித்த 5 பேர்! அதிர வைக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உண்ணாவ் என்னும் கிராமம் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 2 பேர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த 23 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த வழக்கானது அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அப்போது வழக்கிற்காக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்றனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயன்றுள்ளனர். உடலில் பலத்த தீக்காயங்களுடன் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்தார்.
தற்போது அவருக்கு லக்னோவிலுள்ள சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.