கல்லூரி வாசல் முன்பு வைத்து உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம் பெண் பேராசிரியை! காண்போரை அதிர வைத்த சம்பவம்!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வாயிலின் முன் பெண் விரிவுரையாளர் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அங்கிதா பிசுடே என்பவர் 25 வயதானவர். இவர் அந்த மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல இன்று காலை 7:15 மணிக்கு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் அந்த பெண் விரிவுரையாளர் தீ வைத்து கொளுத்த பட்டுள்ளார். 

இதைக்கண்ட பகுதியிலுள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து பதறிப் போயினர். அங்கிருந்தவர்களில் ஒருசிலர் போலீசுக்கு போன் செய்து தகவலை அறிவித்து உடனடியாக அந்தப் பெண் விரிவுரையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பெண் விரிவுரையாளர் அங்கிதா முகம், கை ,முதுகு கழுத்து போன்ற இடங்களில் பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிகேஷ் நாக்ரேல் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை முயற்சிக்கான காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.