என்ன மாரியாத்தா? இப்படி பண்ணிட்ட..! கையில் அக்னிச் சட்டியுடன் விருதுநகரை வலம் வந்த இளம்பெண்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தடை செய்யப்பட்டதால் பெண் ஒருவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தன்னந்தனியாக தீச்சட்டி ஏந்தி வீதிகளில் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் இந்த பங்குனி மாத திருவிழா நடைபெற திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . ஆகையால் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்தனர் . இதனையடுத்து பக்தர்கள் அனைவரையும் தங்கள் வீடுகளிலேயே விளக்கேற்றி அம்மனை வழிபடும் மாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு வயது 48. இவர் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத திருவிழாவில் தவறாது கலந்து கொள்வார். இவர் அம்மனிடம் இந்தாண்டு தீச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமென நினைத்திருக்கிறார். 

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மையால் திருவிழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து மிகவும் மன வேதனை அடைந்தார். எங்கு தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடுமோ என பதறி இருக்கிறார். இதனையடுத்து தனலட்சுமி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அதாவது கோயிலில் கூட்டமாக கூடி தான் எந்த விழாவும் செய்யக்கூடாது. ஆனால் தனியாளாக நாம் நம்முடைய வேண்டுதலை செய்து விடலாம் என எண்ணி இருக்கிறார். ஆகையால் தனி ஒருவராய் தீச்சட்டி ஏந்திக்கொண்டு மாரியம்மன் கோயிலில் வலம் வந்திருக்கிறார். 

மேலும் தனலட்சுமி தீச்சட்டி ஏந்தி கொண்டு கோவில் அருகில் இருந்த வீதிகளிலும் வலம் வந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பரவசமடைந்து குலவை சத்தம் போட்டனர். தனலட்சுமி தன் வேண்டுதலை நேர்த்தியாக முடித்துவிட்டு தீச் சட்டியை கோவிலில் சேர்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.