ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்கலாம்! சவூதி அரசு திடீர் அனுமதி! ஏன் தெரியுமா?

வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கி கொள்வதற்கு சவுதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில் மெக்கா, மதீனா போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. காலம் காலமாக இங்கு தொழில் மற்றும் விளையாட்டு சம்பந்தமாக வரும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் 49 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்க போவதாக சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்திருந்தது.

மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆண் மற்றும் பெண் பயணிகள் தங்களிடையேயுள்ள உறவுக்காண அடையாளங்களை சமர்ப்பித்த பின்னரே ஒரே அறையில் தங்க இயலும் என்ற சூழல் நிலவி வந்தது. இதற்கு இளவரசர் முகமது பின் சல்மான் ஒரு முடிவு கட்டியுள்ளார்.

அதாவது வெளிநாட்டு ஆண் மற்றும் பெண் பயணிகள் தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்தே ஒரே அறையில் தங்க இயலும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பெண் பயணிகள் தனி அறையில் தங்கி கொள்வதற்கும் அடையாள அட்டை இருந்தாலே போதும். இதுவரைக்கும் சவுதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் தனியாக அறை எடுத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த விதியும் தகர்க்கப்பட்டுள்ளது. தங்களுடைய குடும்ப அடையாள அட்டையை காண்பித்து பெண்கள் தனியறையில் தங்கலாம் என்றும், உடன் ஒரு ஆண் தங்க வேண்டும் என்றால் அவர்களுக்குள்ளான உறவிற்கு சான்றை சமர்பித்த பின் தங்கி கொள்ள இயலும் என்று சவுதி சுற்றுலாத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது சவுதி அரேபியாவில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.