ஸ்கூல் தோழிக்காக திருநம்பியாக மாறிய இளம் பெண்! விபத்தில் கணவன் சிக்கியதால் விபரீத முடிவு!

தன்னுடன் படித்துவந்த தோழிக்காக பெண்ணொருவர் திருநம்பியாக மாறியுள்ள சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் ஆனையூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுகன்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு நெம்சியா என்ற பள்ளித்தோழி இருந்தார். இருவரும் இப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10- ஆம் வகுப்பு வரை படித்து வந்தனர். இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போன்று ஒன்றாகவே செல்வர்.

எதிர்பாராவிதமாக நாளடைவில் நெம்சியாவின் உடலில் பாலின மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாக மாற தொடங்கினார். இவருக்கு ஏற்படும் மாற்றங்களை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் நெம்சியாவுடன் பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருவருடைய நெருக்கத்திற்கு பயந்து சுகன்யாவின் பெற்றோர் அவருக்கு 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தனர். ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதியினருக்கு 6 வயதில் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்பாராவிதமாக 6 மாதங்களுக்கு முன்னர் ராஜேஷுக்கு விபத்து ஏற்பட்டது. அவரால் சரிவர எழுந்து நடக்க இயலாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் சுபநிகழ்ச்சி ஒன்றிற்கு சுகன்யா சென்றிருந்தார். அப்போது தன்னுடைய பள்ளி தோழியான எப்ஸியாவை கண்டுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து இருவரும் தங்களுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். வழக்கம் போல இருவரும் நெருக்கமாக இருக்க தொடங்கினர். கணவருக்கு ஏற்பட்ட விபத்தினால் தன் வாழ்வு முழுவதும் இருண்டுவிட்டதாக சுகன்யா எப்ஸியாவிடம் அழுது புலம்பியுள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட எப்ஸியா தன்னுடன் சேர்ந்து வந்து வாழுமாறு சுகன்யாவிடம் கூறியுள்ளார். ஆசை வார்த்தைகளில் மயங்கிய  சுகன்யா தன்னை அழைத்து செல்லுமாறு அடம் பிடித்துள்ளார். சுகன்யாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக எப்ஸியா  முழுவதுமாகவே ஆணாக மாறிவிட்டார். மேலும் தன்னுடைய பெயரை ஜோஸ்னா என்று மாற்றி கொண்டார்.

மதுரையில் உள்ள தனியார் மாலில் எப்ஸியா வரவேற்பாளராகவும், அதே மாலில் ஜோஸ்னா காவலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். தனக்கு பிறந்த 6 வயது குழந்தையை தம்பியின் வீட்டில் தவிக்கவிட்டு சுகன்யா ஜோஸ்னாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகளை தன்னிடமே அனுப்பி விடுமாறு சுகன்யா முறையிட்டு வந்துள்ளார்.

ராமநாதபுரம் கீரக்கரை காவல் நிலையத்தில் சுகன்யா வழக்கு பதிவு செய்தார். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் நீதிமன்றத்தின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சுகன்யா முடிவு செய்துள்ளார். உறவினர்களோ நடத்தை கெட்ட பெண்ணிடம் குழந்தையை ஒப்படைக்க இயலாது என்று அடம் பிடிக்கின்றனர்.

இந்த சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.