வயிற்று வலிக்கு மருத்துவமனைக்குச் சென்ற பெண்! 3 குழந்தைகளை பெற்றெடுத்த விசித்திரம்

சிறுநீரக கல் வலி என்று நினைத்த பெண் கர்ப்பமாக இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் வசித்து வந்த பெண் தனக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. தனக்கிருந்த சிறுநீரகம் பிரச்சனைகளால் வலி ஏற்பட்டிருக்கும் என்றெண்ணி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்தப் பெண்ணின் பெயர் டேனியல் கிளிட்ஸ். மேலும் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மசக்கை உணர்வும், சாதாரண பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ உணர்வுகளும் இல்லாமல் இருந்த டேனியலுக்கு 3 குழந்தைகள் கருவிலிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியும், அதிகளவில் சந்தோஷமும் அடைந்துள்ளார். 

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 3 குழந்தைகளையும் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவமானது மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு ஜிப்ஸி, நிக்கி, பிளேஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சம்பவமானது மருத்துவமனையில் மகிழ்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.