சாலை ஓரம் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்! பதைபதைக்க வைத்த சிசிடிவி!

சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி தூக்கி தூக்கி வீசப்பட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி என்ற இடம் அமைந்துள்ளது. அவிநாசிக்குட்பட்ட முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் நந்தினி. ஞாயிற்றுக்கிழமை மதியம் தன்னுடைய குழந்தை மற்றும் உறவினரின் குழந்தையை அழைத்துக்கொண்டு பட்டறை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

அப்போது சூலூர் நோக்கி மாருதி ஆல்டோ ரக கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரானது அதிவேகத்தில் சென்று நந்தினியின் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் நந்தினி சில மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் நந்தினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சம்பவம் அறிந்து காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நந்தினி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் முடிவெடுத்தனர்.

விபத்து ஏற்படுத்திய சூளுரை சேர்ந்த ஓட்டுநரான கோவிந்தசாமி என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.