வைரலான கிளுகிளு டிக்டாக் வீடியோ! பஞ்சாயத்து போர்டு செயலாளருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

அலுவலகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து வெளியிட்ட ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஓமலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள சிக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராக ராஜேஸ்வரி என்ற பெண் பணியாற்றி வந்தார். பணி நேரத்தில் இவர் அவ்வப்போது திட்டக் வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவருடைய டிக்டாக் வீடியோக்கள் மிகவும் வைரலாயின. இந்த வீடியோக்கள் உயரதிகாரிகளின் பார்வைக்கு சென்றன. வீடியோவை பரிசோதித்த உயரதிகாரிகள் ராஜேஸ்வரியை கண்டித்து புளியம்பட்டி ஊராட்சிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

பணி நேரத்தில் இவர் டிக்டாக்வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த ஒரே குற்றத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.