கள்ளக்காதலனை மது பாட்டிலால் அடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருப்பது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் உடம்பு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன்! கள்ளக்காதலனை அதிர வைத்த இளம் பெண்! திருப்பத்தூர் பகீர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிங்காரப்பேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே அமைந்துள்ள கோவிந்தாபுரம் எனும் இடத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய வயது 40. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக கேரளா மாநில கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அதே இடத்தில், திருப்பதிக்கு திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அங்கநாதவலசையை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினர். மைதிலியை திருப்பதி தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மைதிலி மதுப்பழக்கத்திற்கு அதிக அளவில் அடிமையானதை உணர்ந்த திருப்பதி, அவரை மீட்டெடுப்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றார். ஆனாலும் மைதிலியின் குணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே திருப்பதி மீண்டும் கேரளாவுக்கு சென்றுவிட்டார். திருப்பதி சென்ற பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து மது வாங்கி தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனிடையே மைதிலிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு ஆணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்த தொடங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் மைதிலி காண்பதற்கு திருப்பதி கேரளாவிலிருந்து வந்தார். அப்போது மைதிலி வேறொரு நபருடன் வீட்டு மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மைதிலிக்கும், திருப்பதிக்கும் வாக்குவாதம் தொடங்கின.
அப்போது திடீரென்று மைதிலி மது பாட்டிலை எடுத்து திருப்பதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். திருப்பதியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மைதிலி மற்றும் அவருடன் மது அருந்திய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்போது திருப்பதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.