வயிறு வலிப்பதாக டாக்டரிடம் சென்ற இளம் பெண்! உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்! மருத்துவர்கள் அதிர்ச்சி!

வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் அதிர்ச்சி அடைந்த சம்பவமானது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது இளம்பெண்ணுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியுள்ளது. பல ஆண்டுகள் தாக்குப்பிடித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆரம்ப கட்டத்தில் மருத்துவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. அவரின் உடலை ஸ்கேன் செய்து பார்த்தபோது திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. 

அவரின் உடலில் பெரிய கட்டி இருந்துள்ளது. அந்த கட்டியினுள் பற்கள், எலும்புகள், தலைமுடி ஆகியன இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது இவருடைய தாய்க்கு இரட்டை குழந்தைகள் கருவில் இருந்துள்ளன. 

அதில் ஒரு குழந்தை உள்வாங்கியுள்ளது. இவர் மட்டுமே குழந்தையாக பிறந்தார். இந்த நோயானது 5,00,000 பேர்களுள் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது. ஆண்களுக்கு மட்டுமே இந்த நோய் ஏற்பட்டுவந்த நிலையில், பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடுமையான சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் கட்டியை வெளியே எடுத்தனர். கட்டியை வெளியே எடுத்த பின்னர், அந்த பெண் நலமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.