பொது இடத்தில் இளம் பெண் செய்த செயல்! 24 ஆண்டுகள் சிறையில் அடைத்த அரசு!

ஹிஜாப்பை கழுற்றி அரசுக்கு எதிராக போராடிய பெண் ஆர்வலருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஈரான் நாட்டில் கட்டாய பர்தாவுக்கு எதிராக "வைட் வெட்னஸ்டே" எனும் குழு போராடி வருகிறது. இந்த குழுவில் மிகவும் முக்கிய உறுப்பினராக 20 வயதான அஃப்ஷாரி என்ற பெண் திகழ்ந்து வருகிறார். இவருடைய தாயாரும் இந்த குழுவில் பங்கேற்கிறார்.

பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் பர்தா அணியாமல் ஈரான் தலைநகரான தெஹ்ரான் பகுதிகளில் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டனர். இதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அஃப்ஷாரி ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தார். சிறையினுள் நன்னடத்தையுடன் இருந்த காரணத்தினால் அவர் பிப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் மனித உரிமைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வந்தார்.

மீண்டும் அஃப்ஷாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஈரான் நாட்டில் உள்ள புரட்சிகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், " அஃப்ஷாரி பர்தா அணியாததால் விபச்சாரத்தை ஊக்குவித்ததாகவும், அரசுக்கு எதிராக முழக்கங்களை ஏற்படுத்தியதற்காகவும் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது" என்று தீர்ப்பளித்தார்.

இவருடன் போராடிய 3 பெண்களுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த சம்பவமானது ஈரான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.