பிறந்த மகளை நடுத்தெருவில் தவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தன்னுடைய கணவருடன் தலைமறைவாகியுள்ள சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற மகளை தள்ளி வைத்துவிட்டு ரவுடியுடன் தலைமறைவான ஷாலினி..! தகாத உறவால் பரிதவிக்கும் பிஞ்சு..!

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி என்ற இடம் அமைந்துள்ளது. காட்பாடியில் ஜானி என்ற பெயர் மிகவும் பிரபலமாகும். இவர் மிகப்பெரிய ரவுடி. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட கொள்ளை, ஆட்கடத்தல் என மொத்தம் 45 வழக்குகளுள்ளன. காவல்துறையினர் இவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடி வருகின்றனர். 2 ஆண்டுகளாக ஜானி தலைமறைவாகியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஜானி மீது மற்றொரு புகார் எழுந்து வருகிறது. அதாவது காட்பாடியில் உள்ள பிரபல தொழிலதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிப்பதை ஜானி வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் பல தொழில் அதிபர்கள் இவருக்கு பயந்து கொண்டு பணத்தை ஜானியின் வங்கிக்கணக்கில் போட்டுள்ளனர்.
இன்னும் சிலரை ஜானி தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அனைத்து செயல்களுக்கும் ஜானியின் மனைவியான ஷாலினியே மூலக்காரணம் என்று கூறப்படுகிறது. ஷாலினியின் வயது 26. இவர் மார்ச் மாதம் 23-ஆம் தேதியன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே எப்பாடுபட்டோ நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை விதைக்கப்பட்டதையும் மதிக்காமல் ஷாலினி தலைமறைவாகிவிட்டார்.
காவல்துறையினர் கடந்த 2 மாதங்களாக ஷாலினியை தேடி வருகின்றனர். ஆனாலும் அவர்களால் ஷாலினி கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் ஷாலினி தன்னுடைய கணவரான ரவுடி ஜானியுடன் தலைமறைவாகி இருப்பார் என்று காவல்துறையினர் யூகித்து தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவருக்கும் ஒரு சின்ன குழந்தை உள்ளது என்றும், அந்த குழந்தை காப்பகத்தில் பாதுகாப்பாக வளர்ந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த வழக்கானது காவல்துறையினருக்கும் பெரும் சிம்மசொப்பனமாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.