2வது கணவனுக்குப் பிறந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்! பிறகு நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

அரியலூர் மாவட்டத்தில் பெண்ணொருவர் தன்னுடைய 2-வது கணவனுக்குப் பிறந்த குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆனது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகளின் பெயர் சுமிதா. இவரின் வயது 34.  சுமிதாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அவருடைய கணவர் எதிர்பாராத வகையில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மகளுக்கு சிறிய வயதென்பதால் 2-வது திருமணம் செய்து வைக்க கிருஷ்ணமூர்த்தி எண்ணினார். அதேபோன்று மூன்றாண்டுகளுக்கு முன்னர் சுமிதாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.  

அரியலூர் புது மார்க்கெட் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதல் மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் சுமிதாவுக்கும் ஜெயக்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதான ரித்தீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கணவன் மற்றும் மனைவி இடையே பலத்த சண்டைகள் நிகழ்ந்து வந்தன. பலமுறை கோபம் முற்றிப்போய் ஜெயக்குமார் சுமிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

வழக்கம்போல நேற்று காலை இருவருக்கும் சற்று தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த ஜெயக்குமார் தன் வீட்டை விட்டு வெளியேறினார். தனிமையில் இருந்த சுனிதா தன் தாயாருக்கு  போன் செய்துள்ளார். பின்னர் எனக்கு சீதனமாக வழங்கிய நகைகளை வந்து எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கூறியுள்ளார். இதனால் பதறிய சுமிதாவின் தாய் மீண்டும் கால் செய்துள்ளார். ஆனால் சுமிதா தன் கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். வெளியே சென்ற ஜெயக்குமார் வீடு திரும்பிய போது அவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்ற போது சுமிதா மற்றும் ரித்தேஷ் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ந்தார். ரித்திஷ் கொலை செய்துவிட்டு, சுமிதா தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமிதாவின் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.