முதல் காதலனுக்கு 41 வயது..! புதுக் காதலனுக்கு 21 வயசு..! உல்லாசமாக இருக்க 34 வயதில் கிருஷ்ணவேணி போட்ட பிளான்..! ஆரணி பகீர்!

திருமணம் செய்து கொள்வதற்கு தடையாக இருந்ததால் இளம்பெண் ஒருவர் முன்னாள் காதலனை கொலை செய்துள்ள சம்பவமானது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி பகுதியில் சைதாப்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 41. இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சென்ற ஜனவரி மாதம் 19-ஆம் தேதியன்று இவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சாலையில் கிடந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திடீரென்று ஒரு நாள் அஜித்குமார் என்ற 21 வயது இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவருடன் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின்போது 34 வயதான கிருஷ்ணவேணி என்ற பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக அஜித்குமார் கூறியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணவேணி சில நாட்களுக்கு முன்னர் முள்ளிப்பட்டிற்க்கு வருகை தந்த போது காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையிலடைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர், "கொலை செய்யப்பட்ட சுரேஷை நான் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் சுரேஷை பிரிந்தேன். அவருக்கு அதீத மதுப்பழக்கம் இருந்ததால் தான் எங்களுக்குள் விரிசல் தொடங்கியது. அதன்பின்னர் சவுண்ட் சர்வீஸ் என்ஜினீயரான  அஜித்குமார் என்னுடன் நெருக்கமாக பழகி வந்தார். 

அஜித்குமார் என்னுடன் நெருக்கமாக பழகி வருவதை தெரிந்துகொண்ட சுரேஷ் தினமும் மது அருந்திவிட்டு என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷ் என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். இதனிடையே எனக்கும் அஜித்குமாருக்கும் ஒத்துப்போனதால், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்.

சுரேஷின் தொந்தரவு அதிகமானதால், அவரை கொலை செய்துவிட முடிவு எடுத்தோம். அதன்படி சம்பவத்தன்று ஏரி கால்வாய்க்கு வரலாறு சுரேஷை அழைத்தேன். சுரேஷ் அங்கு மதுபோதையில் வந்திருந்தார். அப்போது அஜித்குமாரின் உதவியுடன் அவரை கொலை செய்தோம். என்ன இருவரும் தலைமறைவானோம். ஆனால் துரதிஷ்டவசமாக அஜித்குமார் காவல்துறையினரிடம் சிக்கி கொண்டார்‌.

அதன்பிறகு கும்மிடிப்பூண்டியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். என்னுடைய குடும்பத்தினரையும் உறவினர்களையும் பார்ப்பதற்காக முள்ளிபட்டிற்கு வந்தபோது காவல்துறையினர் என்னை கைது செய்தனர்" என்று வாக்குமூலம் கொடுத்தார். 

இந்த சம்பவமானது ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.