30 வருடங்களாக ஆண்ணொருவர் பெண்ணொருவராக வாழ்ந்து வந்த சம்பவமானது கொல்கத்தாவில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகியும் குழந்தை இல்லை! செக்கப்பிற்கு சென்ற பெண்ணின் உடம்பில் சுரந்த விந்தணு..! அதிர்ந்த டாக்டர்களுக்கு தெரிய வந்த பகீர் உண்மை!

கொல்கத்தா மாநகரில் பீர்பும் என்ற குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 30 வயதான பெண்ணொருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் டெஸ்டிக்யூலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
புற்றுநோயை தீர்ப்பதற்காக சிகிச்சை அளித்தபோது அவருடைய உண்மையான மரபியல் அடையாளத்தை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபருக்கு இயல்பாகவே பெண்ணின் குரல், மார்பகங்கள், மற்றும் சாதாரண பிறப்புறுப்பு முதலியவற்றை கொண்டிருந்தார். ஆனால் இயல்பாகவே இருக்கக்கூடிய கருப்பை இருக்கவில்லை.
வயிற்று வலியுடன் அவர் வந்தபோது அவருடைய உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலில் விந்தணுக்கள் இருப்பதை கண்டறிந்தோம். உடனே அவருக்கு டெஸ்டிக்யூலர் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தோம். அவர்களுடைய உடலில் டெஸ்டோஸ்டிரோன் சுரக்காத காரணத்தினால் ஆண் போன்ற தோற்றம் பெறவில்லை.
அதே நேரத்தில் பெண் ஹார்மோன்கள் அதிகரித்ததால் அவர் பெண்ணின் தோற்றத்தை பெற்றார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது கொல்கத்தாவில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.