அசுர வேகத்தில் ரயில்! தண்டவாளத்தில் சிக்கிய பெண்! நொடியில் நிகழ்ந்த அதிசயம்! வாயடைத்துப் போன மக்கள்!

ரயில் வருவதை அறியாமல் கடக்க முயன்ற பெண் ரயிலுக்கு அடியில் தப்பிப்பிழைத்த சம்பவமானது  கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் குல்பர்கா மாவட்டம் அமைந்துள்ளது. குல்பர்கா ரயில் நிலையத்தில் பெண்னொருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு அந்த பெண் பயந்துள்ளார். 

நடைமேடையிலிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை படுத்துக்கொள்ளுமாறு கூச்சலிட்டுள்ளனர். அதன்படி அந்த பெண் தன்‌ உடலை குறுக்கித்து தண்டவாளத்தில் படுத்துக்கொண்டுள்ளார். 

அந்த இரயில் அதிவேகமாக பெண்ணை கடந்து சென்றது. இந்த சம்பவமானது முழுவதுமாக வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.