வாடகை வாங்கப் போன ஓனர் ஜவுளிக் கடையில் கண்ட காட்சி! 5 குழந்தைகளின் தாயாருக்கு நேர்ந்த பயங்கரம்! திருச்செந்தூர் அதிர்ச்சி!

ஜவுளி கடை ஒன்றில் பெண் பணியாளர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு பகுதியை சேர்ந்தவர் ரபீஷா. இவர் உடன்குடியில் உள்ள ஒரு ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கட்டிடத்தில் கடை இயங்கி வருவதால் வாடகை பெறுவதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது கடையில் ரபீஷா மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ரபீஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்து உள்ளதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.