கணவனை விவாகரத்து செய்துவிட்டு 20 வயது மகனால் கர்ப்பமான 25 வயது அம்மா..! கேட்போரை தலை சுற்ற வைக்கும் சம்பவம்!

தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு வளர்ப்பு மகன் ஆல் பெண்ணொருவர் கர்ப்பமாகிய சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யாவில் கிராஸ்நோடார் கிராய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு மெரினா என்ற 35 வயது பெண் தன்னுடைய கணவர் அலெக்ஸ் உடன் வசித்து வந்தார். அலெக்ஸின் வயது 45. அலெக்ஸ் ஏற்கனவே திருமணமானவர். இவருடைய மூத்த மனைவிக்கு பிறந்த மகன் தற்போது இவர்கள் உடனே வசித்து‌ வருகிறார். 

இந்நிலையில் வளர்ப்பு மகனான விளாடிமிரை திருமணம் செய்துகொள்ள போவதாக மெரினா சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வசித்து வருகின்றனர். இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, " 7 வயதில் என்னுடன் இருந்தார். தற்போது 20 வயது வரை என்னுடன் இருக்கிறார்" என்று பதிவு செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மெரினாவை கடுமையாக சாடியுள்ளனர். அதற்கு மெரினா, பலரும் "என்னை பலரும் இதற்காக திட்டுவர் என்பது தெரியும். ஆனால் அதற்காக நான் வருத்தப்பட போவதில்லை. தற்போது தான் நான் மனநிறைவான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார். தற்போது மெரினா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். "நான் கர்ப்பம் அடைந்ததை தெரிந்து கொண்டவுடன் என்னையே அறியாமல் கதறி அழுதேன். நான் கருவுற்ற அன்றிரவு என்னால் உறங்க இயலவில்லை. என்னுடைய குரலும் கைகளும் நடுங்கின. விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம்" என்று கூறினார்.

இதுகுறித்து அலெக்ஸ் கூறுகையில், "என்னுடைய மகனை அவள் முழுவதும் மயக்கி விட்டாள். வீட்டில் அவளுடன் என் மகன் நெருங்கி பழகியதை நான் நிறைய முறை பார்த்துள்ளேன். அதற்கு அவள் வெட்கப்பட்டது இல்லை. இதனால் நான் அவளை விவாகரத்து செய்தேன்" என்று கூறினார்.

இந்த செய்தியானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.