8 மாதத்திலேயே கடுமையான பிரசவ வலி! துடித்த கர்ப்பிணி! குழம்பிய மருத்துவர்கள்! ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு தெரியாமலேயே புற்றுநோயை ஏற்படுத்த செய்தியானது பிரிட்டன் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பிரிட்டன் நாட்டில் ஹல் நகரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சார்லட் என்ற 34 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இசபெல்லா என்ற 5 வயது மகளும், அலெக்ஸாண்ட்ரா என்ற 4 வயது மகளும் பிறந்துள்ளனர். இந்நிலையில் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்றபோது சாதாரண வயிற்றுவலியாக இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவர் 3-வது குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவருடைய நுரையீரலில் 10 புற்றுநோய் கட்டிகளும், கல்லீரலில் 7 புற்றுநோய் கட்டிகளும் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சிகிச்சைக்காக சார்லட் சென்றார். சிகிச்சை பெற்ற பின்னர் விரைவில் பிரிட்டன் திரும்ப போவதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், "விரைவில் பிரிட்டன் நாட்டிற்கு திரும்பவுள்ளேன். என்னுடைய இறப்பிற்கு மருத்துவர்கள் இன்னும் நாட்கள் குறிக்கவில்லை. ஆனால் இன்னும் 1 ஆண்டுக்காலம் தான் உயிரோடிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய குழந்தைகளை நினைத்து பார்த்தால் தான் கவலையாக இருக்கிறது.

எனக்கு ஆன்மீகத்தின் மீது அதிக அளவில் ஈடுபாடு உள்ளது. நான் இறந்த பின்னரும் என்னுடைய குழந்தைகளை சுற்றியே என்னுடைய ஆன்மா இருக்கும். உலகத்தை விட மிகவும் சிறப்பான இடமாக சொர்க்கம் என்ற இடம் உள்ளது என்று அவர்களிடம் கூறி வளர்த்து வருகிறேன்" என்று கூறினார்.

இந்த வீடியோ எனது சமூகவலைத்தளங்களில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.