ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கும் சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஓடும் ரயிலில் துடித்த கர்ப்பிணி! தடதட சத்தத்தில் பிறந்த குழந்தை!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி எனும் இடம் அமைந்துள்ளது. திருத்தணி அருகே உள்ள கோரமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. கீர்த்தனா என்பவர் இந்த கிராமத்தை சேர்ந்தவர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
சென்னையில் உள்ள எழும்பூர் தாய் மற்றும் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக திருத்தணியில் இருந்து ரயில் வண்டியில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். வில்லிவாக்கத்தில் அருகே வந்து கொண்டிருந்தபோது நேற்றிரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடன் பயணித்து கொண்டிருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதிகாலை 1 மணியளவிற்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தவுடன் காவல்துறையினரின் உதவியுடன் தாய் மற்றும் குழந்தையை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூரில் உள்ள தாய் மற்றும் சேய் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவமானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.