ஏற்கனவே 5 குழந்தைகள்! கருத்தடை சாதனம் பொருத்திய பெண்! ஆனாலும் வயிற்றில் உருவான கரு! அதிர்ச்சியில் குடும்பம்!

கருத்தடை சாதனம் பொருந்திய பிறகும் பெண்னொருவர் கருவுற்றது அமெரிக்கா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் எவ்ளின் கிரவுஸ் என்ற 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 5 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில் இனிமேல் குழந்தை பிறக்க வேண்டியதில்லை என்பதற்காக கருத்தடை சாதனம் பொருத்தியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் எவ்லினுக்கு மீண்டும் மசக்கை எண்ணம் ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த பின்னர் அவர் 6-வது முறையாக கருவுற்று இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் கருத்தடை சாதனமானது அவருடைய கருப்பைக்குள்ளே சென்றுள்ளது. மேலும் அது அவருடைய வயிற்றிலுள்ள குழந்தையின் அக்குளுக்கு கீழ் அப்போது இருந்துள்ளது.

இதனால்தான் அவர் கருவுற்றிருந்தார். குழந்தை கருவுற்ற 6 மாதத்திலேயே அவருடைய பனிக்குடம் உடைந்துள்ளது. மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர், மிகவும் குறைந்த எடையுடைய குழந்தை பிறந்துள்ளது. மேலும் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு அளித்த பின்னர் தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இவ்வளவு கடினமாக பிறகு பிறந்த குழந்தை "தெய்வ அருள் பெற்ற குழந்தை" என்று எவ்லின் பெருமிதம் கொள்கிறார்.

இந்த செய்தியானது படிப்போர் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.