சொந்தக்காரங்களே திருடி பட்டம் கட்டிட்டாங்க! போலீஸ் ஸ்டேசன் போய்ட்டு வந்த பெண் எடுத்த விபரீத முடிவு!

திருட்டு வழக்கு தொடர்பாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அவமானப்படுத்தப்ட்ட துக்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய வயது 46. இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பார்வதி. இவருடைய வயது 44. அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கமல்ராஜ் என்ற மகனும் கவிதா(25) என்ற மகளும் உள்ளனர்.

கவிதாவுக்கு சில ஆண்டுகள் முன்னர் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுபாஷ் சந்திர போஸின் உறவினரின் பெயர் மணிகண்டன். மணிகண்டன் தன்னிடம் இருந்த நகைகளை பத்திரமாக வைத்து கொள்ளுமாறு சுபாஷ் சந்திரபோஸிடம் கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிக்கொண்ட சுபாஷ் தன் வீட்டில் வைத்துக்கொண்டார்.

மணிகண்டன் நகைகளை திருப்பி கேட்டபோது சுபாஷ் சந்திரபோஸ் மழுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நகைகளை திருடிய குற்றத்திற்காக சுபாஷ் சந்திரபோஸ் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் சில நாட்களாக விசாரித்து வருகின்றனர். 

விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று காவல்துறையினர் பார்வதி மற்றும் கவிதாவை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரையும் தரைகுறைவாக காவல்துறையினர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த பார்வதி இன்று காலை அவர் வீட்டு பால்கனியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில்,"என் உறவினர்கள் 3 பேர் சேர்ந்து எனக்கு 'திருடி' பட்டம் கட்டிவிட்டனர். இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக செயல்படுகின்றனர். அவர்கள் என்னை தரக்குறைவாக நடத்திய வருத்தத்தில் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என் தற்கொலைக்கு காரணமான அனைவரை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் பார்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. பார்வதியின் கணவரை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது தன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்காக புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது தியாகராய நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.