பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரபல தொழிலதிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசதிக்கு இல்லைனாலும் அசதிக்குனு நினைச்சேன்! ஆனால்? பெண்ணால் தொழில் அதிபருக்கு நேர்ந்த பரிதாபம்!

சென்னை பள்ளிக்கரணையில் ஐஐடி காலனி என்னுமிடம் அமைந்துள்ளது. இந்த காலனியில் 39 வயது நபரான பாலசந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 2015- ஆம் ஆண்டு என்னுடைய மனைவி இறந்து போனார். என்னுடைய குழந்தைகள் மாமனார் வீட்டில் வசித்து வருகின்றனர். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வடபழனி, துபாய், மும்பை ஆகிய இடங்களில் பணியாற்றி வருகிறேன்.
சென்ற ஜூன் மாதத்தில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்தேன். அப்போது விமான நிலையத்திற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து பெண் ஒருவர் வந்திருந்தார். அடுத்த சில நாட்களில் அந்த பெண் தன்னை பற்றி என்னிடம் முழுமையாக கூறினார். அதாவது அவருக்கு 38 வயதாகி உள்ளது என்றும், இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறினார்.
மேலும் வெளிநாட்டிற்கு செல்வதற்காக பயிற்சி எடுப்பதற்காக என்னுடைய நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் என்றும் கூறினார். அதன் பிறகு எங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம், தன்னை நிறுவனத்தின் எம்.டி. என்றும், என்னுடைய மனைவி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அவர் மீதிருந்த பரிதாபத்தில் நான் இதனை கண்டுகொள்ளவில்லை.
அதன்பின் என்னுடைய குழந்தைகளுக்கு தாய் வேண்டும் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இதனை என்னுடைய தாயாரும் ஒப்புக்கொண்டார். மேலும் என்னுடைய கிரெடிட்கார்டையும் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்தேன். அதன்பிறகு அவருடைய வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக 7 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறி புலம்பினார்.
மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து அந்த கடனை அடைக்க உதவி செய்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டோம். அப்போது அவருக்கு குடிப்பழக்கமும், சிகரெட் பழக்கமும் இருப்பதை நானறிந்து கொண்டேன். அப்போது அவரை பற்றி விசாரணை நடத்தினேன்.
அப்போதுதான் அவர் 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதும் எனக்கு தெரியவந்தவுடன், நான் கொடுத்த கிரெடிட் கார்ட், லேப்டாப் முதலியவற்றை திரும்பத்தருமாறு கூறினேன். ஆனால் அந்தப் பெண் வடபழனி கோவிலில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகிறார்.
அந்த பெண் என்னிடமிருந்து பெற்ற அனைத்து பணம் மற்றும் செல்வங்களை திருப்பி தர நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.