முகமது ரிஸ்வான் மனைவியான ஜூனைனா நர்மின் என்கிற இந்திரா! கதறும் பெற்றோர்! தெலுங்கானா பரபரப்பு!

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா. இவர் பல வருடங்களாக முஹமது ரிஸ்வான் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் அவர் இந்திரா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரை ஜூனைரா நர்மின் என்று மாற்றிக்கொண்டார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.

ஒரு வருடம் கழித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்க முன்வந்துள்ளனர். அதாவது இந்திரா "லவ் ஜிஹாத்" என்ற கருத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் காவல்துறையினர் இந்த புகாரை வாங்க மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் புகாரை வாங்கவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், "எங்கள் மகளை கட்டாயமாக மதமாற்றம் செய்து வைத்துள்ளனர். எங்கள் மகள் ஏன் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அவரை வீட்டிற்குள் அடைத்து துன்புறுத்துகின்றனர். மேலும் அவரை சிரியா போன்ற நாடுகளில்‌ விற்கவும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர். ஒரே ஒரு முறை எங்கள் முன் எங்கள் பெண் வந்து நின்றால் போதும்." என்று கூறினர்.

காவல்துறையினர் கூறுகையில், "பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் சமர்ப்பிக்கலாம்" என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்கள் சிலர் ஜூனைராவை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர் "என் விருப்பத்திற்கேற்றவாறு நான் மதமாற்றம் செய்து கொண்டேன்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.