ரூ.200 நோட்டு இருந்தா தான் கையெழுத்து! இந்தியன் பாணியில் வசூல் வேட்டை நடத்தும் பெண் அதிகாரி! வைரல் வீடியோ!

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண் லஞ்சம் வாங்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மத்திய கிளை அமைந்துள்ளது. அலுவலகத்தில் கண்காணிப்பாளராக தமிழ்ச்செல்வி என்ற பெண் பணியாற்றி வருகிறார்.

தமிழ்ச்செல்வி குறித்து சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அதாவது தன்னிடம் மக்கள் எடுத்துவரும் கோப்புகளில் 200 ரூபாய் லஞ்சமாக கொடுப்பவர்களின் கோப்புகளை மட்டுமே அவர் அடுத்த நிலையான கம்ப்யூட்டர் பதிவிற்கு அனுப்பி வைக்கிறார். நீங்க வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோ குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மத்திய கிளையின் பொறுப்பாளரான பொன்னுரங்கத்திடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை!! அந்த வீடியோ ஜோடிக்கப்பட்டதாக இருக்கலாம். அலுவலகத்திற்கு சென்று வீடியோவை பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று நழுவி சென்றார்.

சமூக வலைதளங்களில் கமென்ட் செய்துள்ள சிலர் இந்தியன் படத்தை நினைவு கூர்ந்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் காமெடி நடிகர் செந்தில் ஆர்டிஓ அதிகாரியாக பணியாற்றி இருப்பார் அவர் தன்னிடம் வரும் கோப்புகளை லஞ்சப் பணம் இருந்தால் மட்டுமே கையெழுத்திடுவார். இந்த காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

அதே போன்று இந்த பெண் லஞ்சம் வாங்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.