வயது வெறும் 26 தான்..! ஆனால் ராமநாதபுரம் ராஜ பிருந்தா செய்த சாதனை என்ன தெரியுமா?

பெண் அரசு அதிகாரி ஒருவர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றுள்ளது இராமநாதபுரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை அருகே அமைந்துள்ள கொத்தார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவியின் பெயர் வாசுகி. ராஜேந்திரன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தம்பதியின் மூத்த மகளின் பெயர் ராஜபிருந்தா. இவருடைய வயது 26.

தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக அதிகாரியாக பணியாற்றி வந்தார். திருமணத்திற்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தேர்ச்சி பெற்ற பின்னர் உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 

அதன்பிறகு அவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் ஒரு மாத காலத்திற்குள் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதினார். குரூப் 4 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தற்போது டிஎஸ்பியாக பணிபுரிய உள்ளார். இவருக்கு ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது இவருடைய ஊர் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.