பெண் வாடிக்கையாளரை படுக்கைக்கு அழைத்த டெலிவரி பாய்! ரூ.200 கூப்பன் வழங்கி அசர வைத்த ஸ்விக்கி!

பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக ஸ்விக்கி ஊழியர் மீது பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.


பெங்களூருவை சேர்ந்த பெண்ணொருவர் . கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்விக்கி நிறுவனத்தின் ஆப் வழியாக இரவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை வீட்டிற்கு கொடுக்க வந்த ஸ்விக்கி ஊழியர் உணவை கொடுத்து விட்டு அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்துள்ளதாக்க தெரிகிறது. பெண்ணிடம் மெதுவாக சென்று தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறிர்களா? என்று கேட்டுள்ளார் அந்த ஊழியர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த பெண் ஸ்விக்கி வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு  சம்பந்த்தப்பட்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். தன்னை படுக்கைக்கு அழைத்த அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பெண் புகார் அளித்த நிலையில் எதையும் கண்டுகொள்ளாத ஸ்விக்கி நிறுவனம் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கோரியதோடு சலுகையாக அப்பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது. இதனால் அப்பெண் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதனையடுத்து தனக்கு நடந்த அத்துமீறல் குறித்து  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த இணையதள நண்பர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதை மறைக்க ரூ.200 கொடுத்து சரிகட்ட ஸ்விக்கி முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது.