கட்டிய மனைவி கற்பழிப்பு! நாய், பூனைகளுடன் உடலுறவு! நடிகர் மீது அதிர வைக்கும் புகார்!

நடிகர் ஜிம் கம்மிங்ஸ் மீது அவரது மனைவி, பாலியல் புகார் கூறியுள்ளது, ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜிம் கம்மிங்ஸ், நடிகர் என்பது மட்டுமின்றி, வின்னி அண்ட் பூ, சோனிக் தி ஹெட்ஜ்காக்கில் வரும் டாக்டர். ரோபோட்னிக் போன்றவற்றுக்கு டப்பிங் பேசி , பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளார். இவரது மனைவி ஸ்டெஃபானி கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2011ம் ஆண்டே இவரை விட்டு பிரிந்து சென்று, தனியாக வாழ்கிறார். இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன்பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், கம்மிங்ஸ் மீது அவரது மனைவி நீதிமன்றத்தில் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார். அதாவது, பலமுறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தனக்கு கம்மிங்ஸ் சித்ரவதை அளித்துள்ளார் என்றும், இதுதவிர, உரிய சம்மதம் இன்றி பலமுறை பலாத்காரம் செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் முன்பாகக்கூட போதை மருந்தை உட்கொண்டுவிட்டு, தன்னை பலவிதமாக, அவர் சித்ரவதை செய்திருக்கிறார் எனவும்,கம்மிங்ஸின் மனைவி குறிப்பிட்டுள்ளார். 

வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுடன் கூட கம்மிங்ஸ் பாலியல் உறவு கொள்வதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். பிரிந்து வாழ தொடங்கிய பிறகும், குழந்தைகளை காரணம் காட்டி, அவ்வப்போது, தன்னை பின்தொடர்ந்து வந்து, பலாத்காரம் செய்வதை கம்மிங்ஸ் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அத்துடன், குழந்தைகளை கொன்றுவிடுவேன் என மிரட்டி, என்னை விலங்குகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் கம்மிங்ஸ் கட்டாயப்படுத்தினார், என்றும் ஸ்டெஃபானி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.