பாக், பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியாவில் பெருகும் செல்வாக்கு! வாகாவில் குவியும் இந்தியர்கள்!

வாகா எல்லையில் அபிநந்தனை வரவேற்க குவியும் மக்கள்... இந்தியா திருவிழா கோலம்


பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட விங்க் கமாண்டரை வரவேற்பதற்கு வாகா எல்லையில் பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகிறார்கள்.

திருவிழா கூட்டம் போன்று வாகா எல்லையில் மக்கள் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துவருகிறது. இஸ்லாமபாத்தில் இருந்து லாகூருக்குப் புறப்பட்ட அபிநந்தன் இன்னும் சில மணி நேரங்களில் வாகா எல்லையை வந்தடைவார்.

அவரை வரவேற்பதற்கு பதாகைகளுடன் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கிறார்கள். எல்லையோர பதட்டத்தைக் குறைப்பதற்கும், இரு நாட்டுக்கும் இடையே அமைதி நிலவவும் அபிநந்தன் உறுதுணையாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

போரால் எதையும் சாதிக்கமுடியாது என்று பேச்சுவார்த்தைக்கும் நல்லெண்ணத்துக்கும் முன்னுரிமை கொடுத்திருக்கும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானுக்கு இந்தியாவில் பெரும் செல்வாக்கு உயர்ந்து வருகிறார். 

தேர்தல் நேரத்தில் இந்தியாவில் போர் வருவதற்கு மோடி ஆசைப்படுகிறார் என்று இம்ரான்கான் சொல்வது உண்மைதானோ என்று மக்களும் எண்ணத் தொடங்கிவிட்டனர். ஒரு பாகிஸ்தான் அதிபருக்கு இந்தியாவில் ஆதரவு கிடைப்பது இதுவே முதல் முறை.

சபாஷ் இம்ரான்.