கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொந்தரவு குறையுமா?

கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் தோன்றும் சிறுநீர் பிரச்னை, நான்காவது முதல் ஏழாவது மாதங்களில் குறைந்துவிடும் என்று சில பெண்கள் கூறுவதுண்டு. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. இந்தப் பிரச்னை பிரசவம் வரையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.


·         பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வேகமாக எழுந்து பாத்ரூம் செல்லவேண்டிய அவஸ்தை அதிகரிக்கத்தான் செய்யும்.

·         எவ்வளவு நேரங்களுக்கு ஒரு முறை பாத்ரூம் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு, அதற்கு முன்னரே பாத்ரூம் செல்வது அவசரத்தில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாகும்.

·         கர்ப்பப்பை பெரிதாக வளரும்போது, சிறுநீர்ப் பைக்கான அழுத்தமும் அதிகரிக்கத்தான் செய்யும். அதனால் பாத்ரூம் செல்லவேண்டிய எண்ணிக்கை கர்ப்பகாலம் முழுவதும் அதிகரிக்கவே செய்யும்.

·         பாத்ரூம் செல்லும்போது அவசரமின்றி முழுமையாக சிறுநீர் கழித்துவிட்டு வந்தால், இந்த பிரச்னையில் இருந்து ஓரளவு தப்பிக்கமுடியும்.

ஆரம்ப கட்டங்களில் பெரும் அவஸ்தையாக தெரியும் சிறுநீர் பிரச்னை, அதற்கடுத்த மாதங்களில் கர்ப்பிணிக்கு பழகிப்போன ஒன்றாகத் தெரியும் என்பதால்தான், நான்கு மாதங்களுக்குப் பிறகு குறையும் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல