எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்துகிறார் ஸ்டாலின்! என், எதற்கு, எப்போதுன்னு தெரியுமா?

முதலமைச்சர் கூறுவது படி லட்சக்கணக்கான முதலீடுகள் வந்தால் திமுக சார்பில் பாராட்டு விழா எடுப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் உறுப்பினர்களுள் மு.பெ.சாமிநாதனும் ஒருவர். இவர்‌ திமுகவின் முன்னாள் அமைச்சரும் கூட. இவருடைய மகனின் திருமண விழா திருப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்டார்.

விழாவில் பேசிய ராதாகிருஷ்ணன், "நாடாளுமன்ற தேர்தலில் எங்களை வீழ்த்தியதன் மூலம் வெற்றி தளபதியாக ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். வெற்றியின் மூலம் கலைஞரின் போன்று உழைக்க வேண்டும் என்பதையும் அவர் அறிய வேண்டும்"என்று பேசினார்.

சிறப்புரை நிகழ்த்தியபோது, "வரலாறு காணாத அளவிற்கு பொருளாதாரம் நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் மிகப்பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். தற்போது வெளிநாடுகள் சென்றுள்ள முதலமைச்சர் கூறியதுபடி முதலீடுகளை அழைத்து வந்தால் திமுகவின் சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்படும். இல்லையென்றால் அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை என்றே அழைக்கப்படும்" என்று கூறினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.