டெல்லியில் 1.5 ஜிபி டேட்டா ஹாட்ஸ்பாட்களின் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வைஃபை டேட்டா இலவசம்! 11 ஆயிரம் இடங்களில் ஹாட் ஸ்பாட்! இளைஞர்களுக்கு இனிப்பான அறிவிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பிரமாதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது டெல்லி முழுவதும் சில நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக டெல்லி முழுவதும் 11,000 ஹாட்ஸ்பாட் கனெக்ட்டிவிட்டிகளை உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை டெல்லி முழுவதிலும் "ப்ரெஸ்டொ" என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மதிப்பானது 100 கோடிக்கும் மேலிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.