மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி ஆடுவாரா? CSK பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி வெளியிட்ட தகவல்!

மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான IPL போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி இது வரை விளையாடிய 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3 வது இடத்தில உள்ளது. மும்பை இந்தியன்ஸ் இன்னும் இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று மோதவுள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரையில் தோனி கடைசி போட்டியில் தசை பிடிப்பு காரணமாக பேட்டிங் செய்யவில்லை. உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதால், சென்னை அணி ஏற்கனவே பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால்,எஞ்சிய மூன்று போட்டிகளில் விளையாடுவாரா என்பதில் சந்தேகமே. இதை பற்றி கூறிய சென்னை அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி, தோனி இந்த போட்டியில் ஆடுவாரா இல்லையா என்று அவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். சென்னை மைதானத்தில் ஆடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் அவர்தான் ஓய்வு எடுப்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.