நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வர நேரிடும் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மிரட்டிய காரணத்தினால் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவு வீட்டுக்கு வருவோம்! மிரட்டிய சி.பி.ஐ! பதறிய விஜயபாஸ்கர்!

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வர நேரிடும் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மிரட்டிய காரணத்தினால் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கடந்த வாரம் அமைச்சரின் உதவியாளர் சரவணனை விசாரணைக்கு வரவழைத்து சி.பி.ஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். சுமார் மூன்று நாட்கள் காலையில் தொடங்கி இரவு வரை விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது சரவணன் கூறிய சில தகவல்கள் விஜயபாஸ்கருக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் வகையில் சில ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சி.பி.ஐ அலுவலகத்திற்கு விஜயபாஸ்கர் ஓடி வந்தார். அவரிடம் இரவு பத்தரை மணி வரை விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஞாயிறன்றும் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜரானார். இதுநாள் வரை விசாரணைக்கு வராமல் விஜயபாஸ்கர் இழுத்தடித்து வந்த நிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வரவில்லை என்றால் இரவில் வீட்டுக்கு வந்த கதவை தட்ட வேண்டி வரும் என்று சி.பி.ஐ தரப்பில் இருந்து விஜயபாஸ்கருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனால் தான் விஜயபாஸ்கர் சனிக்கிழமை அன்று பதறிப்போய் விசாரணைக்கு ஆஜரானதாக கூறப்படுகிறது. இதனை காக்க வைத்த விஜயபாஸ்கரை சி.பி.ஐயும் நீண்ட நேரம் அலுவலகத்தில் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு வந்த விஜயபாஸ்கருக்கு உட்கார சேர் கூட அதிகாரிகள் வழங்கவில்லை. மேலும் விசாரணையையும் தொடங்கவில்லை. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை சி.பி.ஐ அலுவலக லாபியில் நின்று கொண்டும், அங்கும் இங்கும் அழைந்து கொண்டும் இருந்துள்ளார் விஜயபாஸ்கர்.