ஒழுங்கா வேலை செய்யலனா? அடி வெளுத்துடுவோம்! ஆர்டிஓக்களுக்கு கட்கரி பகிரங்க எச்சரிக்கை!

ஆர்.டி.ஓ அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்யாவிட்டால் பொதுமக்களிடம் அடி வாங்க நேரிடும் என்று நிதின் கட்காரி கண்டித்துள்ளார்.


நிதின் கட்காரி தற்போதைய அரசின் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சில வாரங்களுக்கு முன்னர் ஆர்.டி.ஓ ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதை எடுத்துரைத்தார்.

அதாவது "நாங்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது போன்று, அரசின் சேவகர்களான நீங்களும் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களே. பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சீர்செய்யாவிடில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சரமாரியாக அடிக்க நான் பொதுமக்களுக்கு உத்தரவு வழங்குவேன்.

மேலும் எந்த முறையில் நீதி சரிவர வழங்கப்படவில்லை ஐயோ அதனை தூக்கி எறியுமாறு என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு கற்பித்துள்ளனர்" என்று ஆவேசமாக உரையாற்றினார். ஆனால் மக்கள் சந்திக்கும் எந்த பிரச்சினைக்காக அவர் ஆவேசமாக பேசினார் என்பது இதுவரை தெரியவில்லை. இவருடைய ஆவேசப் பேச்சை கேட்ட ஆர்.டி.ஓ அதிகாரிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.