பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட வலுக்கும் எதிர்ப்பு!

காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த தீவிரவாத செயலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது.இந்த செயலுக்கு உலகஅளவில் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

 அவர்களுக்கு பாக்கிஸ்தான் ஆதரவு தருவதை தருவதை பல்வேறு தரப்பினர் மிக கடுமையாக கண்டித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியா , பாகிஸ்தானுக்கு அளித்துவந்த இணக்கமான நாடு என்ற பட்டதை திரும்ப பெற்றது. 

அதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 200 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.

மேலும் இந்திய அணி பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக்கூடாது என்று பிசிசிஐ க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்த வண்ணம் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் பிசிசிஐ என்ன முடிவெடுக்கும் என்று.