இந்து நாடாக மாறுகிறதா இந்தியா? காஷ்மீரின் ராணுவக் குவிப்பின் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் மீண்டும் தீப்பற்றி எரிகிறது. அமர்நாத் பாதையில் தீவிரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கியுள்ளார்கள் என்று ஏராளமான ராணுவம் குவிக்கப்படுகிறது.


யாத்திரிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும், ஏற்கெனவே வந்தவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். என்னதான் நடக்கிறது..? ஒரு மாதத்திற்கும் மேலாக யாத்திரை அமைதியாக நடந்துவரும் சூழலில்,  தீவிரவாதிகள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

அதுவரை நம் காவலர்கள் என்ன செய்தார்கள்? ராணுவம், செயற்கைக் கோள்கள் கண்காணிப்பு இவர்களை மீறியா தீவிரவாதி செயல்பட முடிகிறது? காஷ்மீரை மூன்றாகப் பிரிப்பது, நிர்வாக வசதிக்கு என்று சொல்லப்படுவதைவிட, இந்தியாவை நேபாளம் போல் இந்து நாடாக அறிவிப்பதற்கான முன்னோட்டம் என்பதாகவே பார்க்கப்படுகிறது.  

இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரம் மிகப் பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் இன்னும் சில நாட்கள்/வாரங்களில் தெரிய வரும். மக்களின் கவனத்தை காஷ்மீரை நோக்கி திசை திருப்ப மைய அரசு நிகழ்த்தும் மோசடி வேலையே இது என்றும் சொல்லப்படுகிறது.