அமித் ஷா பிரதமர் ஆவாரா..?

இந்த முறை பா.ஜ.க. வெற்றி அடைந்து மீண்டும் பிரதமர் மோடியே தொடர்வார் என்று அமித் ஷா உறுதி அளித்திருக்கிறார். அது மட்டுமின்றி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக இந்த முறை தனித்த கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மீண்டும் மீண்டும் அமித் ஷா கூறிவருவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்று எதிர்க் கட்சியினர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

சமீபத்தில் அமித் ஷா, “தமிழ்நாடு, கேரளாவிலும் இந்த முறை நாங்கள் சீட்கள் பெறுவது உறுதி. ஐந்து தென் மாநிலங்களையும் சேர்த்து பாஜக தனித்த பெரிய கட்சியாக வாகை சூடுவது உறுதி என்பதை நான் தெளிவாகத் தெரிவிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, ‘’காஷ்மீரில் பாஜக அதிகாரம் செலுத்த முயற்சிப்பதாக சில விஷமப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. எங்களுக்கு எதிரான அந்தப் பிரச்சாரத்தை முறியடிக்கவே நாங்கள் இந்த முறை பாஜக வேட்பாளரை களமிறக்கவில்லை. முதலில் அங்கே பாஜகவை வலுப்படுத்துவோம் பின்னர் வேட்பாளரைக் களமிறக்குவோம் என முடிவு செய்தோம்.

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு வரவேற்பு உள்ளது. அதற்கான சாட்சி தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதிவான வாக்கு சதவீதம். இதற்கு முன்னர் வெறும் 14% ஆக இருந்த வாக்கு சதவீதம் இம்முறை 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதைவிட முக்கியமாக முதன்முறையாக புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ளோர் வாக்களித்துள்ளனர். முன்பெல்லாம் ஒற்றை இலக்க அளவிலேயே அவர்கள் வாக்களித்தனர்.” என்றும் கூறியிருக்கிக்கிறார்.

வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் குறிப்பாக தென் இந்தியாவில் வெற்றி பெற்றி இத்தனை உறுதியாக மீண்டும் மீண்டும் பேசுவதைப் பார்த்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள் எதிர்க் கட்சியினர்.