தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானம்..! சுரேஷ் பெட்டிக்குள் இருந்த குரங்குகள், அணில்கள், பல்லிகள்! பதறிய அதிகாரிகள்!

தாய்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வனவிலங்குகள் கடத்தப்பட்டு வந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை விமான சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்கு வனவிலங்குகள் கடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்தன. உடனடியாக அவர்கள் நேற்று தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவரது உடைமைகளில் வனவிலங்குகள் கடத்தப்பட்டு வந்ததை கையும் களவுமாக சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர் எடுத்துட்டு வந்த பெட்டியில் 2 குரங்குகள், சிவப்பு நிற கண்களை கொண்ட 3 குரங்குகள், அணில்கள் மற்றும் பல்லி வகையை சார்ந்த 12 உயிரினங்கள் முதலியன இருந்துள்ளன.

உடனடியாக அதிகாரிகள் சுரேஷ் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரினங்களுக்கு இந்திய சீதோசன நிலை ஏற்கத்தக்கது அல்ல என்பதால் அவற்றை பாங்காக் இருக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சம்பவமானது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.