கருவை கலைத்துவிடு..!முன்னாள் காதலனுக்காக இளம் மனைவி செய்த பகீர் செயல்! பிறகு அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!மதுரை திகுதிகு!

முன்னாள் காதலனின் அறிவுரையின் பெயரில் கருவை கலைத்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகளின் பெயர் ரேவதி. இவருக்கும் அமைதிச்சோலை பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் வீட்டில் ரேவதி வசித்து வந்தார். அப்படியே கல்லூரிக்கும் ரேவதி சென்று வந்தார். ரேவதி திடீரென்று கருவுற்றார். கர்ப்பமான பிறகு அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறிய ரேவதி தன்னுடைய தந்தையின் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

ஒரு நாள் திடீரென்று வயிறு வலி அதிகமானது தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய 4 மாத கரு சிதைந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்த சிசு கார்த்திக்ராஜாவின் வீட்டருகில் புதைக்கப்பட்டது.

சில மாதங்களாக மனமுடைந்த நிறைவேற்றி யாரும் எதிர்பாராதவாறு தன்னுடைய தந்தையின் வீட்டில் மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது இரு வீட்டாருக்கும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சந்தேகத்தைத் தீர்த்து கொள்ள நாராயணன் மதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்‌. அதாவது திருமணம் செய்வதற்கு முன்பே ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்குமாறு அருண் ரேவதியின் தந்தையிடம் கேட்ட போது அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். 

பின்னர் கார்த்திக் ராஜா உடன் திருமணம் முடிந்த பின்னரும், இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். கருவை கலைத்து விட்டு வந்தால் வாழ்க்கை தருவதாக அருண் ரேவதிக்கு ஆசை காட்டியுள்ளார். வாட்ஸ்அப் மூலம் இது போன்று பேசிய ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். கரு கலைந்த பின்னர் மனமுடைந்த கால் ரேவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் அருணை வலைவீசி தேடி வருகின்றனர். புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வுகளின் முடிவு எடுத்த பின்னரே அருள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று வட்டாட்சியர் அலுவலகம் கூறுகிறது.

இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.