கணவன் வீட்ல இல்லை..! நீ வர்றியா? அழைத்த மனைவி..! நேரில் சென்ற கள்ளக் காதலன்..! திடீரென அங்கு நிகழ்ந்த பயங்கரம்! கோவை திகுதிகு!

கோவையில் பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் இணைந்து கொண்டு தன் கணவனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் மணியக்காரன்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் குமார் என்பவர் தன் மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகிறார் .இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் . ஆனால் சங்கீதா அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வேலைக்கு சென்றுள்ளார் . இவருக்கு இருக்கும் குடிப்பழக்கத்தால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

சங்கீதாவின் வீட்டிற்கு தினமும் பிரபு என்பவர் பால் விற்பனை செய்துள்ளார். பால் ஊற்ற வரும் அவரிடம் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை தன் கணவர் செய்யும் கொடுமைகளையும் சங்கீதா கூறி புலம்பியிருக்கிறார். பின்னர் இவர்களுக்கு இடையில் நட்பு மலர்ந்துள்ளது.ண நாளடைவில் இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சங்கீதா , பால்காரர் பிரபுவுடன் வைத்திருந்த பழக்கத்தின் காரணமாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் அவருடைய கணவரான குமாரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சங்கீதா தன் கணவருடன் சண்டை இட்டு குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு தன் பெற்றோர் இல்லத்திற்கு சென்று விட்டார். 

தாய் வீட்டிற்கு சென்றாலும் சங்கீதாவால் பிரபுவை மறக்க இயலவில்லை ஆகையால் அங்கு சென்ற பின்பும் அவர்களுடைய கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனையடுத்து பிரபுவை அவ்வப்போது சந்திப்பதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார் சங்கீதா. இவர்களின் கள்ள காதலை பற்றி அறியாத குமார் சங்கீதாவின் வீட்டிற்கு வந்து தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டிருக்கிறார். இப்படியாக பல முறை அவர் வற்புறுத்தியும் இருக்கிறார்.

பின்னர் சங்கீதா தன் கணவர் தன்னை சேர்ந்து வாழும்படி வலியுறுத்துவதாக கள்ளக்காதலன் பிரபுவிடம் கூறியிருக்கிறார் . இவர்கள் இருவரின் உறவுக்கு தடையாக இருக்கும் குமாரை கொலை செய்துவிட்டால் தாங்கள் இருவரும் நிம்மதியாக இருக்கலாம் என்று இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர் . ஆகையால் இருவரும் சேர்ந்து குமாரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

நேற்றைய தினம் குமார் தன்னுடைய வீட்டில் குடி போதையில் படுத்துக் கொண்டிருந்திருக்கிறார். வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு சங்கீதா மற்றும் பிரபு ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர். கட்டிலில் குடி போதையில் உறங்கிக் கொண்டிருந்த குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கீரி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் அலறி கூச்சலிட்டார்.

உடனே அருகில் இருந்த அக்கம்பக்கத்தினரும் வீட்டை நோக்கி வந்துள்ளனர் . பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அங்கிருந்த மக்கள் தூக்கி சென்றுள்ளனர். பொதுமக்களின் வருகையை பார்த்து அங்கிருந்து சங்கீதாவும் பிரபுவும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் அங்கிருந்த பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதா மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரையும் தேடி கண்டு பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். சொந்த கணவரையே கள்ளக்காதலுக்காக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.