திருமணமாகி 20 நாள்..! வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன்! பக்கத்து வீட்டு காரனோடு மனைவி கொடுத்த ஷாக்!

திருமணமாகி 20 நாட்களிலேயே மனைவி கணவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய ஆடியோவை கேட்டு கணவன் அதிர்ச்சி அடைந்து மட்டுமல்லாமல் ஒரு உயிரும் பலியாகியுள்ளது.


26 வயதான வேல்முருகன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்கும் 23 வயதான ராஜஸ்ரீ என்பவருக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேல்முருகன் வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரது மொபைலுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ மனைவியிடம் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நான் விரும்பிய வாழ்வை நான் தேடிக் கொள்கிறேன். யாரும் என்னை தேடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று அந்த ஆடியோவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் வேல்முருகனின் மனைவி ராஜஸ்ரீ தனது வீட்டின் அருகே இருந்த சந்தோஷ் என்ற இளைஞருடன் ஓடிப் போனது தெரிய வந்துள்ளது. ராஜஸ்ரீகும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணத்திற்கு முன்னரே இருவருக்கும் தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த சந்தோஷின் தந்தை தனது மகன் இப்படி செய்து விட்டானே என்ற விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் ராஜஸ்ரீ மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.