என் குழந்தைக் அப்பா முகத்தை பார்த்தது இல்லை! ப்ளீஸ் உதவுங்கள்! கதறும் பெண்மணி! அதிர்ச்சி காரணம்!

துபாயில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் தவித்து வருவதால் பாகிஸ்தானுக்கு சென்ற தனது கணவரை உடனடியாக திரும்பி வருவதற்கு உதவுமாறு கேட்டு கொண்டுள்ளார்.


கென்யா நாட்டை சேர்ந்த சஞ்சனா என்ற 27 வயதான பெண்ணுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர். அவரது கணவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ செலவுக்காக போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அந்தப் பெண்ணின் கணவர் பாகிஸ்தானில் உள்ள இடம் ஒன்றை விற்பதற்காக கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்று உள்ளார்.

அந்த சமயத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றால் அவரால் பாகிஸ்தானிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப இயலவில்லை. இதனால் மூன்று குழந்தைகளுடன் துபாயில் வசித்து வரும் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதுபற்றி கூறிய அவர் எனது கணவருக்கு பயண அனுமதி கிடைப்பதற்காக நான் இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தேன். முதல் முறை நான் விண்ணப்பித்தபோது ஏப்ரல் மாதத்தில் அது நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் முறை விண்ணப்பித்த எனது விண்ணப்பம் தற்போது நிலுவையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்

எனக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் மூன்று மாதங்களான இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். எங்களுடைய இரட்டை குழந்தைகள் இதுவரை அவரது தந்தையின் முகத்தை பார்த்ததில்லை. எனது இரண்டு வயது மகன் நாள் தோறும் தந்தையை கேட்டு அழுது வருகிறான். அதுமட்டுமல்லாமல் நான் வேலையில்லாமல் வீட்டிலேயே தங்கி இருக்கும் பெண். என்னுடைய கணவர் உதவி இல்லாமல் என்னால் குழந்தைகளை பார்த்துக் கொள்வதிலும் அவர்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்குவது கூட என்னால் தற்போது இயலவில்லை.

எனது கணவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை. குழந்தைகளின் மருந்து செலவிற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கடன் வாங்கி செலவு செய்து வருகிறேன். என் கணவர் இந்த மாதம் திரும்பி வராவிட்டால் அவர் வேலையை இயக்க நேரிடும். ஏனென்றால் அவர் இந்த மாதம் திரும்ப பணிக்கு வராவிட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவார் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

என்னால் மருத்துவமனை பில்லை கட்ட முடியாததால் இன்னும் எனது இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் என்னால் வாங்க இயலவில்லை. இதன் காரணமாக எனது குழந்தைகளுக்கு நான் தடுப்பூசி போடப் போட முடியவில்லை. இதன் காரணமாக எனது கணவர் மீண்டும் பாகிஸ்தானிலிருந்து வருவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஐக்கிய அரபு ஏமிரேட் அதிகாரிகளிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.