இளைஞர் ஒருவர் நெருங்கிய நண்பரின் மனைவியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவமானது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பனின் மனைவியை கடத்தி வாடகை வீடு எடுத்து குடித்தனம் நடத்திய இளைஞர்! கன்னியாகுமரி அதிர்ச்சி!

நாகர்கோவிலில் மார்த்தாண்டம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்து கட்டிட தொழிலாளி ஒருவர் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் தொழிலாளிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியாக பேசுவதற்காக அவ்வப்போது அவரது வீட்டிற்கு நண்பர் வந்து செல்வார். அப்போது தொழிலாளியின் மனைவியிடமும் குழந்தைகளிடமும் மிகவும் கனிவாக பேசுவார்.
இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல தொழிலாளியின் மனைவிக்கும், அவருடைய நண்பருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி அந்த நண்பருடன் பூட்டிய வீட்டுக்குள் நெடுநேரம் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தொழிலாளிக்கு அரசல் புரசலாக தெரிய வந்தது. உடனே அவர் தன் மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் எச்சரித்து சில நாட்களிலேயே மனைவி காணாமல் போயுள்ளார். அதே நாளில் நண்பரும் காணாமல் போனதை தொடர்ந்து தொழிலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மார்த்தாண்டம் பகுதி காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிட தொழிலாளி என் மனைவியும், அவருடைய நண்பரும் ராஜாக்கமங்கலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று இருவரையும் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர்.
காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கினார். தாயில்லாமல் தொழிலாளியின் குழந்தைகள் கதறி அழுததை கண்டு தொழிலாளியின் மனைவி மனம் மாறினார். பின்னர் அனைவருக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது மார்த்தாண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.