கணவனுக்கு கொரோனா கஷாயம்..! குடித்துவிட்டு மயங்கிய பிறகு நள்ளிரவு மனைவி செய்த பகீர் செயல்! தூத்துக்குடி திக்திக்!

கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு மனைவி நகைகளை திருடிய சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய வயது 58. இவருடைய மனைவியின் பெயர் ஜான்சி. இவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பலரும் ஜான்சிக்கு வட்டித் தொகையை சரிவர அளிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை ஜான்சிக்கு கடன் ஏற்பட்டுள்ளது. 

கடனை அடைக்க இயலாமல் ஜான்சி மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் வின்சன்ட் கடந்த பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து நகையாக மாற்றி கிட்டத்தட்ட 93 சவரன்கள் வரை வங்கியில் பத்திரமாக வைத்திருந்தார். வங்கியில் இருக்கும் நகைகளை திருடுவதற்கு ஜான்சி முடிவெடுத்தார். அதன்படி வங்கியிலிருந்து வின்சென்ட்க்கு கால் செய்து வங்கியில் இருந்து நகைகளை எடுத்துக்கொள்ளுமாறு குரலை மாற்றி பேசியுள்ளார்.

இதனை நம்பிய வின்சன்ட் தன்னுடைய மனைவியுடன் சென்று  வங்கியில் இருந்த நகைகளை மீட்டெடுத்து வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்குள் வந்து உள்தாழிட்டு நகைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஜான்சி மயக்க மருந்து கலந்து கசாயத்தை வின்சென்ட்க்கு கொடுத்துள்ளார். 

கசாயத்தை குடித்த பின்னர் வின்சன்ட் மயங்கியுள்ளார். இதனைப் பார்த்த ஜான்சி பீரோவில் இருந்த நகைகளை திருடியுள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர் மனைவிதான் நகை திருடினார் என்பதை தெரியாமல் வின்சென்ட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

காவல்துறையினர் ஜான்சியிடம் விசாரணை நடத்தியபோது மேற்கூறப்பட்ட உண்மைகள் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் ஜான்சியை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.