1 வருடத்திற்கு முன் மனைவி செய்த செயல்! தற்போது 2 குழந்தைகள் சாப்பாட்டில் விஷம் வைத்த தந்தை! நெஞ்சை உலுக்கிய தஞ்சை சம்பவம்!

மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவர் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் பெற்ற தந்தையே விஷம் கலந்து கொடுத்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி என்ற இடம் அமைந்துள்ளது‌. இதற்கருகேயுள்ள 2-ஆம் புலிக்காட்டு பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 30. இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 

இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுகன்யா என்ற 26 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு வருணிகா ஸ்ரீ என்ற 7 வயது மகளும் ஜனனிகா ஸ்ரீ என்ற 5 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த காரணத்தினால், 1 ஆண்டுக்கு முன்பாகவே சுகன்யா தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு தாயில்லாமல் குழந்தைகளை கதிரவன் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கதிரவன் மிகுந்த மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். 4-ஆம் தேதியன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். அதன்படி குழந்தைகளுக்கு கொடுத்த உணவில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளார். 

பின்னர் அதே உணவை தானும் சாப்பிட்டுள்ளார். 3 பேரும் வீட்டில் சுய நினைவின்றி மயங்கி கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்‌. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், துரதிஷ்டவசமாக குழந்தைகள் இருவரும் நேற்று முன்தினம் இறந்துள்ளனர். கதிரவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்கொலை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.